கோரையாற்றில் முனிவர் சிலை கண்டெடுப்பு

கோரையாற்றில் முனிவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-17 21:43 GMT

மணிகண்டம்:

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே ஓலையூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கோரையாறு செல்கிறது. இதன் குறுக்கே கட்டளை மேட்டு வாய்க்காலில் காவிரி தண்ணீர் சைபன் என்னும் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. அந்த சைபன் அருகே கோரையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் நேற்று முன்தினம் மாலை ஓலையூரை சேர்ந்த சிலர் வலை விரித்து மீன் பிடித்தனர். அப்போது வலையானது தண்ணீருக்கடியில் கிடந்த ஒரு பொருளின் மீது சிக்கிக்கொண்டது. அதிலிருந்து வலையை மீட்க மீன்பிடித்தவர்கள் தண்ணீரில் இறங்கி பார்த்தபோது அங்கு ஒரு கற்சிலை கிடந்தது தெரியவந்தது. பின்னர் 2 பேர் சேர்ந்து அந்த கற்சிலையை தண்ணீரில் இருந்து வெளியே தூக்கி வந்து பார்த்தபோது அது ஒரு முனிவர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது கடந்த ஆண்டு கோரையாற்றில் வந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். அந்த முனிவர் சிலையை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்