யானை தந்தத்தால் ஆன ஆபரணங்கள் கண்டுபிடிப்பு
தாயில்பட்டி அருகே யானை தந்தத்தால் ஆன ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே யானை தந்தத்தால் ஆன ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
15-வது அகழாய்வு குழி
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக 15-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அதில் யானை தந்ததால் செய்யப்படும் தொங்கட்டான்கள் செய்வதற்கான கருவி முழுமையாக சேதம் அடையாத நிலையில் கிடைத்தது.
இக்கருவியை பார்க்கும் போது கலை நயத்துடன் ஆபரணங்களை செய்துள்ளதை அறிய முடிகிறது. இரும்பு உலோகத்தை பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான யானைத்தந்ததால் ஆபரணங்களை அழகிய வடிவில் தயார் செய்துள்ளனர். விலை உயர்ந்த இந்த ஆபரணங்கள் எவ்வித சேதம் இல்லாமல் பல ஆண்டுகள் பயன்படுத்தக் கூடிய வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன.
கூர்முனை ஆயுதம்
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கற்களால் ஆன கூர்முனை ஆயுதம், இந்த ஆயுதத்தை மூங்கில் கம்பின் முன் பகுதியில் இணைத்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி உள்ளனர்.
மேலும் ஐந்து அகழாய்வு குழிகள் தோண்ட இருப்பதால் இன்னும் ஆச்சர்யம் தரக்கூடிய பொருள்கள் கிடைக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.