ஆண்டிமடத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்

ஆண்டிமடத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

Update: 2023-03-11 19:07 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் வேளாண் விளை பொருட்களை ஆண்டிமடம் நான்கு ரோடு மற்றும் சந்தைக்கு இடையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு (கமிட்டி) தினசரி, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அரசு வேலை நாட்களிலும் கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். அதிக வியாபாரிகள் வருவதால் போட்டியின் அடிப்படையில் அதிக விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடைத்தரகு கிடையாது. மறைமுக ஏலம், மின்னணு எடை தராசு, உடனடி பணப்பட்டுவாடா, இலவச உழவர் நல திட்டம், பொருளீட்டுக்கடன் பெறும் வசதி, உலர்களம் வசதி உள்ளிட்டவை உள்ளன. விவசாயிகள் தங்களின் கடலையை உடைக்க குறைந்த செலவில் கமிட்டி வளாகத்திலேயே கமிட்டியின் மூலமாகவே ஏற்பாடு செய்தும் தரப்படும். கமிட்டியில் விளை பொருட்களை விற்பதன் மூலம் அனைத்துவித அரசின் உழவர் சார்ந்த நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும். எனவே அனைத்து விவசாயிகளும் ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட பணியாளர்களை 8760328467, 9442444252 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்