தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி முகாம்
குத்தாலம் அருகே தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி முகாம் நடந்தது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே நக்கம்பாடியில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், குறுவட்ட அளவில் 5 வருவாய் கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு குத்தாலம் தாசில்தார் கோமதி தலைமை தாங்கினார். நக்கம்பாடி, ஸ்ரீகண்டபுரம், மாந்தை, மேலபருத்திக்குடி, கீழபருத்திக்குடி ஆகிய 5 வருவாய் கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் பயிற்றுனர் ஜோஷி, குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேரிடர் காலங்களில் நமது கடமை என்ன?, பேரிடரின் போது எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.