பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் நடந்தது

Update: 2022-09-27 18:45 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் உள்ள வாழச்சேரி ஆற்றில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை நடைபெற்றது. இதில், வரும் பருவ மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெள்ள நீரில் மூழ்கியவரை எப்படி காப்பாற்ற வேண்டும், ஆறுகளில் சிக்கி கொண்டால் எப்படி நீச்சல் அடிக்க முயல வேண்டும் என்பன போன்ற சாகசங்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்