வேலூர் கோட்டை அகழியில் பேரிடர் கால ஒத்திகை

வேலூர் கோட்டை அகழியில் பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது.

Update: 2022-09-01 17:38 GMT

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கோட்டை அகழியில் நேற்று நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில், நகர் நல அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்பாரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்‌. முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை அகழி ஓரம் உள்ள படிக்கட்டு பகுதியில் உதவி கலெக்டர் பூங்கொடி நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலைத்தடுமாறி படிக்கட்டில் விழுந்தார். அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அவரை தூக்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்