ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

ஆனைமலை, வால்பாறையில் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-13 20:00 GMT
ஆனைமலை


ஆனைமலை, வால்பாறையில் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


பேரிடர் மீட்பு ஒத்திகை


வடகிழக்குபருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தலின் பேரில் ஆனைமலை ஆற்றில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.


தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மனிதர்கள் மற்றும் கால்நடைகளை மீட்பது எப்படி? என்று செயல் விளக்கம் அளித்தனர்.மேலும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை எவ்வாறு மீட்பது? முதலுதவி செய்வது எப்படி? வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


வால்பாறை


வால்பாறையில் வருவாய் துறை, போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

இதை யொட்டி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம், தேசிய மாண வர் படை மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் மீட்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


அப்போது வால்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள், தீயணைப்பு வாகனத்தில் நவீன வசதிகள், சாதனங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் வால்பாறையில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து ஒத்திகை செய்து காட்டப்பட்டது.


விழிப்புணர்வு பேரணி


சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறை தாசில்தார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. சப்- இன்ஸ்பெக்டர் முருகநாதன், தீயணைப்பு நிலைய அதிகாரி பிரகாஷ் குமார், துப்புரவு ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதைத்தொடர்ந்து சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்பு ணர்வு பேரணி வால்பாறை காந்தி சிலை முதல் பஸ் நிறுத்தம் வரை நடைபெற்றது. இதில் பேரிடர் மீட்பு ஒத்திகை குறித்த பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவ மாணவிகள் சென்றனர்.

பேரணியை கிணத்துக் கடவு தாசில்தார் சிவக்குமார் தொடங்கி வைத்தார். பேரணி கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி மீண்டும் அங்கே வந்தடைந்தது.


Tags:    

மேலும் செய்திகள்