தணிகைபோளூர் ஏரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

தணிகைபோளூர் ஏரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்

Update: 2022-09-01 18:19 GMT

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பெரிய ஏரியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் நீர்நிலைகள் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ரப்பர் படகில் சென்று ஏரியில் மூழ்கி உயிருக்காக போராடும் நிலையில் உள்ளவரை காப்பாற்றுவது எப்படி? என்பதை பார்வையிட்டார்.

பின்னர், முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது குறித்தும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.

இந்த நிகழ்ச்சியை அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்தனர்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, தாசில்தார் பழனிராஜன், தணிகைபோளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கமலகண்ணன், பழனிவேல், அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ், சுகாதார துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்