ஊராட்சி திட்ட குழு உறுப்பினர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
திருவாடானையில் ஊராட்சி திட்ட குழு உறுப்பினர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
திருவாடானை,
திருவாடானை யூனியனைச் சேர்ந்த கடலோர ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட குழு உறுப்பினர்களுக்கு பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் திருவாடானை யூனியன் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தாமரைச்செல்வி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு பயிற்சியாளர்கள் கமலா, மெஹ்ராஜ் பானு ஆகியோர் கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகளை அளித்தனர். பயிற்சியின் நிறைவில் ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கலந்து கொண்டு பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் பேரிடர் மேலாண்மை குறித்து கலந்துரையாடினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டை ராஜ், முருகேசன், வன்மேகநாதன், ஜென்சி ராணி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.