போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற சீர்காழி மீனவர்கள் கரை திரும்பினர். போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-06-22 18:45 GMT

சீர்காழி:

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற சீர்காழி மீனவர்கள் கரை திரும்பினர். போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த வருடமும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 15-ந் தேதியுடன் தடைக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி வந்தனர்.அதன்படி இந்த ஆண்டு மீன் பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, ராதாநல்லூர், தொடுவாய், கூழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

குறைவான மீன்கள்

61 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக அளவு மீன்களுடன் திரும்பலாம் என்று எண்ணி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு போதிய அளவில் மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்பொழுது பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு கவலை மீன்கள் அதிக அளவில் பிடிப்படுகிறது.

இந்த மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், தற்பொழுது 61 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்கச் சென்றோம் அதிக அளவில் கோலா மீன்கள் மற்றும் பெரிய மீன்கள் கிடைக்கும் என நம்பி கடலுக்குச் சென்றோம்.

ஆனால் தற்பொழுது எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கவில்லை மாறாக சிறிய வகை மீன்கள் தான் கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் வருமானம் மீன்கள் டீசல், ஆள் கூலி உள்ளிட்டசெலவுக்கு தான் சரியாக உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்