மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து விபரீத முடிவு; பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-09 19:14 GMT

மணிமங்கலம்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவருடைய மகள் கீர்த்திகா (வயது 17), இவர் படப்பை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இவர் தேர்வில் வெற்றி பெற்று 384 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்ப்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் கீர்த்திகா மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் தூங்கி கொண்டிருந்தனர்.

போலீசார் விசாரணை

காலையில் வழக்கம் போல் எழுந்த பெற்றோர் கீர்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தூக்கில் தொங்கிய கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்