மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 71 மனுக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.