29 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம்,முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 317 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 29 பேருக்கு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
விற்பனை கண்காட்சி
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு, உலர்பழங்கள் மற்றும் மசாலா பாக்கெட் விற்பனை கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) செண்பகவள்ளி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.