சூலூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி காதல் ஜோடி தஞ்சம்
சூலூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி காதல் ஜோடி தஞ்சம்
சூலூர்
சூலூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.விசாரணையில் அவர்கள் சிதம்பரம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ரேஷ்மா (வயது23), சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த கவுதம் (24) என்று தெரியவந்தது. இவர்கள் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள்.இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பின்னர் இருவருமு் பாதுகாப்பு கேட்டு சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்மனு அளித்தனர். போலீசார் அவர்களிடம், சட்டப்படி பதிவு அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ள அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.