மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.