பழங்குடியின மாணவிகள் விடுதிகளில் இயக்குனர் ஆய்வு

ஊட்டி, கோத்தகிரியில் பழங்குடியின மாணவிகள் விடுதிகளில் நலத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-26 14:39 GMT

ஊட்டி,

தமிழக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் என்.அண்ணாதுரை ஊட்டி அரசு கல்லூரி மாணவிகள் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. அதிக மாணவிகளை சேர்க்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து திருச்சிக்கடி கிராமத்தில், கோத்தர் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இயக்குனர் அந்த மக்கள் தயாரிக்கும் தச்சு பொருட்கள், மண்பாண்டங்கள், கலைப்பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கோத்தகிரி தாலுகா பனங்குடி பழங்குடியின கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு விடுதியில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்