சிறுபான்மையினர் நல மாணவியர் விடுதியில் இயக்குனர் ஆய்வு

ராணிப்பேட்டையில் சிறுபான்மையின மாணவியர்்களுக்கான கல்லூரி விடுதியில் நல இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2023-01-20 17:21 GMT

ராணிப்பேட்டையில் சிறுபான்மையின மாணவியர்்களுக்கான கல்லூரி விடுதியில் நல இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

விடுதி கட்டிடத்தை ஆய்வு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் ராணிப்பேட்டை வந்தார். அவர் ராணிப்பேட்டை காரை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல மாணவியர் விடுதியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியில் சமையலறை, உணவின் தரம் சுவை மற்றும் உணவுக்கூடம் உணவுப் பொருள்கள் இருப்பiw ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் பாதுகாப்பு குறித்த வீடியோ பதிவு அறைகளையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மாணவிகளிடம் விடுதியில் அடிப்படை வசதிகள் குறைகள் ஏதேனும் உள்ளதா? பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா? என கேட்டறிந்தார்.

அப்போது அவர் அரசு உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. உங்களின் கடமை நன்றாக படிப்பது மட்டுமே. அதில் மட்டும் கவனம் செலுத்தங்கள். மற்ற உங்களது தேவைகள் அனைத்தையும் அரசு பூர்த்தி செய்து வழங்குகிறது. விடுதியில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை நாள்தோறும் வாசியுங்கள். போட்டித் தேர்வுகளுக்காக தயார்படுத்துங்கள் படிப்பு ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள் என அறிவுரை வழங்கினார்.

பிரியாணி கடை

இதனைத் தொடர்ந்து முத்துக்கடை பகுதியில் டாம்கோ மூலம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வங்கிடன் பெற்று ஜைனுலாபுதீன் என்பவர் நடத்தும் பிரியாணி கடையை பார்வையிட்டார். அப்போது கடையை விரிவு படுத்தி பெரிய ஓட்டலாக மாற்ற கடனுதவி வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

தொடர்ந்து மேல்விஷாரம் நகராட்சியில் பிரதம மந்திரியின் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை 30 படுக்கை படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் விதமாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இதுவரையில் 30 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது மற்ற பணிகள் அடுத்த நான்கு மாதத்தில் முடிவடையும் என்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார். அப்பொழுது மேலும் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பணிகள் தேவைப்பட்டால் திட்ட அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்பிடவும் அதற்கான நிதி உடனடியாக வழங்கப்படும் எனவும் இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

உத்தரவு

கட்டிடங்கள் மிகவும் தரம் வாய்ந்ததாகவும் கட்டிட பொருள்கள் தரமாக இருப்பதை மருத்துவர்களும் இணைந்து மேற்பார்வையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குறித்த காலத்தில் பணியை முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்