அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவீட்
சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் கூறி இருப்பதாவது;
சனாதான தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்து பல நூற்றாண்டுகளாக சாதிய எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஆகும். சாதி, பாலினத்தின் பெயரிலான மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்கள் சனாதானத்தில் உள்ளது.
அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகளும் இதையே வலியுறுத்துகின்றனர். அமைச்சரின் அறிக்கையை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாகப் பயன்படுத்தும் கேடுகட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது அதிகரித்துவரும் வெறுப்பு தாக்குதல் கவலையளிக்கிறது.
சமூக நீதி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அவரின் பேச்சுக்கு ஆதரவாக நிற்கிறேன். இவ்வாறு அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.