அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆய்வு
அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை அடுத்து உள்ள திருமாஞ்சோலை, அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளி திடீரென்று சென்று மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கும் கணித செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது தொடக்கக்கல்வி துணை இயக்குனர் (சட்டம்) சுவாமிநாதன் மற்றும் பலர் இருந்தனர்.