பயிர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-05 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் மேலாண்மை இயக்ககம் இயக்குனர் எம்.கே. கலாராணி(பயிர்மேலாண்மை), இணை பேராசிரியர் ரா.கார்த்திகேயன்(உழவியல்) ஆகியோர் ஒருங்கினைந்த அங்கக வேளாண் ஆய்வுதிடலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நெல், கால்நடைகள், காளான் வளர்ப்பு மற்றும் மாடித்தோட்டம் பராமரிப்புகளை ஆய்வு செய்து மேலும் மேம்படுத்துவதற்கான உக்திகளை இயக்குனர், தொழில்நுட்பவல்லுனர்கள் மற்றும் தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த 4-ம் ஆண்டு பயிலும் வேளாண் கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் வசம்பு பயிரின் முக்கியத்துவம் பற்றி மற்றும் அதன் மூலம் பூச்சி மேலாண்மை பயன் பற்றியும் கூறினார். மேலும் நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் நெல் மற்றும் மீன் வளர்ப்பு செயல் விளக்க திடலையும் ஆய்வு செய்தார் அப்போது நெல் வயலில் டிரோன் மூலம் வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கும் தொழில் நுட்பத்தை வேளாண் கல்லூரி மாணவர்களுடன் பார்வையிட்டு கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில் நுட்ப வல்லுனர் கமலசுந்தரி, கருணாகரன், பண்ணை மேலாளர் நக்கீரன் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்