சோழீஸ்வரர் கோவிலில் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் ஆய்வு

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-20 18:30 GMT

பொன்னமராவதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திருச்சி வட்ட இயக்குனர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கோபுரம், முன் மண்டபம், சுற்றுமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது தொல்பொருள் துறை பொறியாளர்கள் ராஜன், கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்