ராஜேந்திர சோழன் நினைவிடத்தில் இயக்குனர் கவுதமன் மலர் தூவி மரியாதை

ராஜேந்திர சோழன் நினைவிடத்தில் இயக்குனர் கவுதமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2023-08-12 18:04 GMT

செய்யாறு

ராஜேந்திர சோழன் நினைவிடத்தில் இயக்குனர் கவுதமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பிரம்மதேசத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் சோழ பேரரசரான மாமன்னன் ராஜேந்திரசோழன் தனது இறுதி காலத்தை கழித்ததையும் அவரது சமாதி இங்கு உள்ளதையும் அறிய முடிகிறது.

பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திரசோழன் பிறந்தநாள் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டு ராஜேந்திரசோழன் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலையும் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்