திண்டுக்கல் லியோனியைபாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

திண்டுக்கல் லியோனியை பாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-08-29 21:03 GMT

மதுரை.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கடந்த 21-ந் தேதி தனியார் தொலைக்காட்சியில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் தலைைமயில் அ.தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 21-ந்தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண்களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு தமிழகத்தின் நவீன சிற்பியாக இருந்த ஜெயலலிதாவை விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை வகுக்க கூடிய ஒருவரே ஆணாதிக்கத்துடன் பெண்களை அவதூறாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அவரை கைது செய்ய வேண்டும். அரசு உடனடியாக பாட நூல் தலைவர் பதவியில் இருந்து அவரை உடனே நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்