திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி ஏற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய லதா, சேலம் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன், மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக சேக்முகைதீன் நேற்று பதவி ஏற்றார்.