திண்டுக்கல்: பாஜக நிர்வாகியின் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் - 3 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. நிர்வாகியின் கார், மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் 3 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2022-09-29 17:51 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் பால்ராஜ். கடந்த 24-ந்தேதி அதிகாலையில் குடைபாறைப்பட்டியில் உள்ள அவருக்கு சொந்தமான குடோனிலில் இருந்த கார், 7 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ரங்கராஜ் முன்னிலையில் இன்று திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஹபீப் ரகுமான் (வயது 27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகியோர் சரண் அடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதையடுத்து 3 பேரையும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்