திண்டுக்கல்: நல்லம நாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம நாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-17 06:00 GMT

கோப்புப்படம் 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம நாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புனித வனத்து அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 500 மாடுகள் களமிறக்கப்பட்டு உள்ளதுடன், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளை அடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 14 பேர் காயமடைந்து உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்