தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-21 19:44 GMT

வீணாகும் குடிநீர்

விருதுநகர் தாலுகா இனாம்ரெட்டியப்பட்டி பஞ்சாயத்தில் அருந்ததியர் தெரு கோவில் முன்பு உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் உள்ள நடைபாதை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாக்கனி, திருச்சுழி.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறு உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதனை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

கழிவுநீர் வடிகால் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அய்யனாபுரம் பஜனை கோவில் தெருவில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் ஆதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-ங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் புதிதாக கழிவுநீர் வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அய்யனாபுரம்.

சேதமடைந்த தரைப்பாலம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட 39-வது வார்டு தெற்கு மலையடிப்பட்டி தெருவில் தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலை குறுகலாகி வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுவதுடன், வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைப்பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தெற்கு மலையடிப்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்