தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-18 20:30 GMT

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி 33-வது வார்டு மானகிரியில் சுமார் 2500 நடுத்தர குடும்பத்தினர் உள்ளனர். இங்கு 5-ம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் உயர்கல்வி படிப்பதற்கு மாணவிகள் வெகுதொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜேந்திரபிரகாஷ், மானகிரி, மதுரை.

வாகன ஓட்டிகள் சிரமம்

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலமங்கலம் ரோடு கண்மாய்கரை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து இருபுறமும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய தார்ச்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் கால்வாய் கரைகளில் அழகர்கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், மேலூர், மதுரை.

தெரு நாய்கள் தொல்லை

மதுரை மாநகர் ரேஸ் கோர்ஸ் காலனி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

விபத்து அபாயம்

மதுரை அரசரடி அருகே உள்ள சிக்னலில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேம், அரசரடி, மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்