தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-30 19:26 GMT

விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகிறார்கள். ஒலிசத்தத்தால் கவனகுறைவு ஏற்பட்டு சிறு, சிறு விபத்துகளில் வாகனஓட்டிகள் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் செல்லும் வாகனங்களில் அனுமதியின்றி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்துவதை தடை செய்ய வேண்டும்.

சத்யா, ஸ்ரீவில்லிபுத்தூா்.

அடிப்படை வசதி தேவை

விருதுநகர் மாவட்டம் காரியபட்டி 6-வது வார்டில் தெருவிளக்கு வசதி, ரேஷன்கடை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாந்த், காரியாபட்டி.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் பஞ்சாயத்து மகாத்மா காந்திநகரில் சரியான சாலைவசதி கிடையாது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள், இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் வர தயங்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு முறையாக சாலைவசதி அமைத்துதர நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

அருண், சிவகாசி.

ஓடையில் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-மகாராஜபுரம் சாலையில் வீராகசமுத்திரம் ஓடை உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடை நீரை பயன்படுத்தும் நிலையில் சிலர் இதில் கழிவுநீரை கலந்து குப்பையை கொட்டி வருகிறார்கள். மேலும் இப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து ஓடையில் கழிவுநீர் கலக்காதவாறு தடுக்க வேண்டும்.

பிரகாஷ், வத்திராயிருப்பு.

ஆபத்தான நிழற்குடை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூலாங்கால் பஸ்நிறுத்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் அபாயமான நிலையில் வெளியே தெரிகிறது. இதனால் இதனை பயன்படுத்த பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

பரத்குமார், திருச்சுழி.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியில் மோட்டார் பழுது காரணமாக குடிநீரானது வாரத்திற்கு ஒருமுறை தான் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், செட்டியார்பட்டி.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருச்சுழி சந்திப்பு, பந்தல்குடி சந்திப்பு ஆகியவற்றில் அவ்வப்போது நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.

கமலேஷ், அருப்புக்கோட்டை.

தார்ச்சாலை வசதி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலைக்கோட்டையூர் சின்னையாபுரம் கிராமத்தில் இருந்து பட்டம்புதூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மண் சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகிறாார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றவேண்டும்.

சங்கரலிங்கம், மன்னார்கோட்டை.

பெயர்பலகை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பூபால்பட்டி தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு, ஆர்.சி.சர்ச் தெருக்களுக்கு பெயர்பலகை இல்லை. இதனால் இப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் தெரு தெரியாமல் திசைமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தெருக்களுக்கு உடனடியாக பெயர்பலகை அமைக்க வேண்டும்.

மாயாண்டி, ராஜபாளையம்.

சேதமடைந்த உலர்களம்

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கோபாலபுரத்தில் பயிர்களை உலர வைக்க உலர்களமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த களமானது சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காயவைக்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த களத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

கோகிலவாணி, ஆலங்குளம். 

Tags:    

மேலும் செய்திகள்