தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-30 19:18 GMT

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜென்சிலின், அருப்புக்கோட்டை.

அடிப்படை வசதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் (4-வது வார்டு) ரூக்குமினி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, வீடுகளுக்கு மின்இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செக்கையா, சாத்தூர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாலை சாட்சியாபுரத்தில் ரெயில்வே கிராசிங் உள்ள நிலையில் இதனை கடக்க மேம்பாலம் கிடையாது. இதனால் ரெயில் வரும் நேரங்களில் தண்டவாளத்தின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய், சிவகாசி.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குறைந்த அளவிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த நகரங்களில் பணிபுரிய வரும் மக்கள் பஸ்சுக்காக தனியாரை நாடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழிதடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உசைன்சாகிப், ராஜபாளையம்.

செய்தி எதிரொலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி 28-வது வார்டு அண்ணா காலனியில் சாலை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்களானது சேதமடைந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாய்களை பழுது பார்த்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தீபிகா, சிவகாசி.

சேதமடைந்த சுற்றுச்சுவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்புறம் உள்ள சக்கரகுளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து விரிசலுடன் காணப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவரில் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் சுவர் பலம் இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்து அதில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் அருகே உள்ள ராஜபாளையம் பைபாஸ் ரோடு சேதமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக பிள்ளையார் கோவில் பின்புறம் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூா்.

நோயாளிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அங்கு சுற்றித்திரியும் நாய்களும் உள்ளே புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

ெபாதுமக்கள், தாயில்பட்டி.

எச்சரிக்கை பலகை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரகோபால், திருச்சுழி.

தெருவிளக்கு தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 8-வது வார்டு வனமூர்த்திலிங்கம் பிள்ளைதெருவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தபாபு, செட்டியார்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்