தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-10 19:16 GMT

தார்ச்சாலை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராம பொது மயானத்திற்கு செல்லும் பாதை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்பாதை மண்சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை-காமராஜர் திருமண மண்டபம் வரை உள்ள சாலையில் குப்பை தேங்கிய நிலையில் அள்ளப்படாமல் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் துர்நாற்றத்தாலும், நோய் பரவும் அபாயத்தாலும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி அமைத்து தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும். பொன்ராஜ், முகவூர்.

பயணிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் நீரானது பஸ்சில் ஒழுகுகிறது. இதனால் பொதுமக்கள், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை அகற்றி புதிய பஸ்களை இத்தடத்தில் இயக்க வேண்டும். ராதாகிருஷ்ணன், சிவகாசி.

ஒளிராத தெருவிளக்கு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழபொட்டல்பட்டி கிராமத்தில் கடந்த சிலநாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் அமைக்க வேண்டும். ராஜா, கீழபொட்டல்பட்டி.

கிடப்பில் போடப்பட்ட பணி

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே கே.கே.நகரில் வாருகால் அமைக்க தொடங்கிய பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தோண்டிய குழியானது இன்னும் மூடப்படவில்லை. தோண்டிய குழியில் தினமும் பொதுமக்கள் விழுந்து காயமடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியை முடிக்க வேண்டும். கருப்பசாமி, கே.கே.நகர். 

Tags:    

மேலும் செய்திகள்