தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-09 19:12 GMT

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த அமீர்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பன்றிகள் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அமீர்பாளையம்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்திலிருந்து கட்டனார்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதே சாலையில் உள்ள தரைப்பாலமும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையையும், தரைப்பாலத்தையும் சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்ராஜ், கட்டனார்பட்டி.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் பஜாரில் இருந்து நான்கு வழிச்சாலை மேம்பாலம் வரையிலான சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, திருச்சுழி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர்-சேத்தூர் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-மப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராஜபாளையம். 

Tags:    

மேலும் செய்திகள்