தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-28 19:16 GMT

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, ராஜபாளையம்.

கூடுதல் பஸ் தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து மம்சாபுரத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், மம்சாபுரம்.

சாலை அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனி பாலவிநாயகர் கோவில் தெருவில் புதிய சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டாலின், சிவகாசி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகரில் கவுசிகமா நதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு அகற்றப்படாமலேயே கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக ஆற்றுப்பாலம், ஆனைக்குழாய் தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமலேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே கவுசிகமா நதியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

சேதமடைந்த குடிநீர்தொட்டிதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. தொட்டி இடிந்து விழுந்து விபரீதம் ஏதும் நிகழ்வதற்கு முன்னர் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அல்லம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்