தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-30 18:45 GMT

பயணிகள் நிழற்குடை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் தெற்க்குதரவை ஊராட்சி ஊரணிகரை வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதன் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், ராமநாதபுரம்.

ஆபத்தான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாயூரணியில் இருந்து அறிவித்தி கிராமம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெம்ஸ், திருவாடானை.

கழிவுநீர் கலந்த ஊருணி

ராமநாதபுரம் மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீரை சேமிக்க உள்ள ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் சில ஊருணியில் கழிவுநீருடன் சேர்ந்து குப்பைகளும் கலந்துள்ளன. ஊருணி நீரே பல்வேறு கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன. எனவே மழை காலம் தொடங்கும் முன் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊருணிகளையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பாநகர் சாலையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் பகலில் சாலையின் நடுவே படுத்து தூங்குவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்து ஏற்படுகிறது. அதோடு நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

விஜய்மாரிஸ்வரன், ராமநாதபுரம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் வலசை கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் இருந்து நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வலசை.

தொல்லை தரும் தெருநாய்கள்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. மேலும் அவைகள் ஆடுகளையும் கடித்து கொன்று விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ப.மாணிக்கம், செட்டிகுறிச்சி.

எரியாத தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாமிநாதன், கல்லல்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மின்துறை அலுவலகத்தின் பின்புறம் மயானம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கோழி இறைச்சிகளை கொட்டி செல்கின்றனர். இதனால் மயானத்தை சுற்றி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் கொட்டப்படும் கோழி இறைச்சிகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

திருமாறன், இளையான்குடி.

கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரிய கண்மாய் கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. கருவேல மரங்களால் கண்மாயின் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் விவசாயம் போன்ற தொழில் வளங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், கண்மாயை சுற்றி பயன்தரும் மரங்களை வளர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல்மாலிக், இளையான்குடி.

தேங்கி நிற்கும் மழைநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்றவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கீதா, திருப்பத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் மேலதெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த பகுதியில் பள்ளி, ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் நாய்கள் சுற்றித்திரிவதால் சாலையில் நடக்க அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளை துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ெஜயச்சந்திரன், விருதுநகர்.

பழுதான மின்மோட்டார்

சிவகாசி யூனியன் ஜமீன்சல்வார்பட்டியில் தண்ணீர் வசதிக்காக மின்மோட்டார் பொருத்தி தொட்டி மூலம் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மின்மோடார் பழுதால் தண்ணீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதி இன்றி தவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து,ஜமீன்சல்வார்பட்டி.

சேதமடைந்த பாலம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலை ராபதியேந்தல் விலக்கு அருகே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் ஒருவித அச்ச உணர்வுடனே சாலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தரைப்பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன், நரிக்குடி.

மின்விளக்குகள் ஒளிருமா?

விருதுநகரில் காமராஜர் பைபாஸ் சாலையில் இருந்து அல்லம்பட்டி செல்லக்கூடிய சாலையில் ெரயில்வே சுரங்கபாதை உள்ளது. இதன் மேற்குப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் எரியாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுகாதார வசதியும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. பயணிகள் அமர்வதற்கு கூட வழியின்றி பலரின் ஓய்விடமாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராஜபாளையம்.

தேங்கி கிடக்கும் குப்பை

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் 64-வது வார்டு என்.எஸ்.கே. வீதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதன் அருகில் பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் குப்பைகளில் நடந்தபடியே சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வீதிகளில் தேங்கிய குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராஜ், மதுரை.

பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் கீரைதுரை புதுமகாளிபட்டி ரோடு பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சில சாலை பணிகள் தொடங்கி நிறைவடையாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், அவ்வப்போது வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இருளப்பன், திருமங்கலம்.

பகலில் எரியும் மின்விளக்கு

மதுரை நகர் மீனாம்பாள்புரம் 24,25-வது வார்டு பகுதியில் உள்ள மின்விளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாக செலவாகி வருகிறது. எனவே பகல் நேரங்களில் எரியும் மின்விளக்குகளை அணைத்து இரவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், மதுரை.

சாலையில் தேங்கும் மழைநீர்

மதுரை மாநகராட்சி 24-வது வார்டு அய்யர்பங்களா, இ.பி.காலனி, திரு.வி.க. தெரு, பாரதிதாசன் தெருக்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுன்றனர். இதனால் வாகனஓட்டிகள் பலர் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெய்கணேஷ், மதுரை.



Tags:    

மேலும் செய்திகள்