தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதை அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சினேகவள்ளிபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் குழந்தைகள் கல்வி பயின்று வரும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்றுவர பாதை வசதி இல்லை. இதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்திற்கு பாதை அமைக்கவும், வளாகத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம், திருவாடானை.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் கீழசூராணம் பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய்சேகர், கீழசூராணம்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி 35-வது வார்டு பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்து காணப்படுகிறது. விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், சிவகாசி.
தேங்கி கிடக்கும் குப்பை
திருப்பரங்குன்றம் மேலரத வீதி பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொன்முத்து, திருப்பரங்குன்றம்.
புழுதி பறக்கும் சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஸ் நிறுத்தத்தில் இருந்து மேலரதவீதி, தெற்குரத வீதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலை முழுவதும் மண்மேவி காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதி பறக்கிறது. இதனால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் அவதிஅடைகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவாடானை.
இருள் சூழ்ந்த சாலை
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பால் பண்ணை சிக்னல் பகுதியில் மின்விளக்கு இல்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே இந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டி, மதுரை.
வாகன ஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள சாலையில் சிலர் விதிகளை மீறி காய்கறிகளை விற்றும், வாகனங்களை நிறுத்தியும் வருகின்றனர். இதனால் வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்ைக எடுப்பார்களா?
சரத்குமார், திருப்புவனம்.
கழிப்பறை வசதி வேண்டும்
மதுைர கீழமாசிவீதி பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்படுத்த முறையான கழிப்பறை வசதி இல்லை. இந்த பகுதியில் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சந்தனகுமார், மதுரை.
செய்தி எதிரொலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா நெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதுகுறித்து சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், சாத்தூர்.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி திருநகர் 94-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் இந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வாகனஓட்டிகளின் நலன் கருதி தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், மதுரை.