தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை அவனியாபுரம் குறிச்சி தெரு, பராசக்தி நகர் பகுதியில் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே குப்பைகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துர்கா, அவனியாபுரம்.
சாலை வசதி வேண்டும்
மதுரை வில்லாபுரம் மல்லிகை தெரு 84-வது வார்டு பகுதியில் வடிகால், சாலை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழீவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் சாலையில் நடக்க, முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணி, வில்லாபுரம்.
சேதமடைந்த அங்கன்வாடி மையம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அ.கோவில்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது கடந்த 3 ஆண்டுகளாக அரசு இ-சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், அ.கோவில்பட்டி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு காலை, மாலை நேரங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராம், திருமங்கலம்.
நடவடிக்கை தேவை
மதுரை மாநகராட்சி 37-வது வார்டு தாசில்தார் நகர் நெல்லை வீதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தியை சேர்ந்தவர்கள் வீடுகளில் கழிவறைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நடராஜன், மதுரை.