தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சி 78-வது வார்டு சத்திய சாயி நகர் ரோஜா தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
மோகன், மதுரை.
சேறும், சகதியுமான சாலை
மதுரை மாநகராட்சி கோவலன் நகர் மணிமேகலை தெருவில் பொதுமக்கள் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படும் நிலையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து இந்த பகுதி மக்களின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கப்பாண்டி, மதுரை.
நடவடிக்கை தேவை
மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், அவனியாபுரம்.
சாலையில் சுற்றும் கால்நடைகள்
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், மதுரை.
சுகாதார சீர்கேடுதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மதுரை பழைய கீழ்மதுரை ரெயில் நிலையம் ரோடு, காமராஜர்புரம் இந்திராநகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகுமார், மதுரை.