தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-02 19:50 GMT

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நந்தவனம்பட்டி தெற்கு தெரு முதல் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வரையுள்ள கழிவுநீர் கால்வாய் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குமார், சாத்தூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், ராஜபாளையம்.

தொல்லை தரும் நாய்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் பேரூராட்சியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமுல்ராஜ், மம்சாபுரம்.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் நகர் பகுதியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

முத்துக்கிருஷ்ணன், விருதுநகர்.

தேங்கி கிடக்கும் குப்பை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் பெத்தனாட்சி நகரில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர். 

Tags:    

மேலும் செய்திகள்