தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-30 20:38 GMT

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தென்வடல் ஊராட்சிக்குட்பட்ட தெருவில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராதாகிருஷ்ணன், ஆலங்குளம்.

வாருகால் வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சித்தாலம்புத்தூர் வடக்கு தெருவில் முறையான வாருகால் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளவரசன், சித்தாலம்புத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மேலதெரு பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

தெருவிளக்குகள் தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகதோப்பு சாலையில் உள்ள சக்திநகர், இந்திரா நகர் மற்றும் ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில் உள்ள சாலைகளில் போதுமான அளவு தெருவிளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் இந்த பகுதியில் செல்ல பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலைகளில் தேவையான அளவு தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்குமார், ராஜபாளையம். 

Tags:    

மேலும் செய்திகள்