தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.
தொல்லை தரும் நாய்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. இதனால் இப்பகுதியினர் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, தாயில்பட்டி.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ேமாகன், சிவகாசி.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராேஜந்திரன், விருதுநகர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்குட்பட்ட ஒருசில கிராமப்புற பகுதியில் உள்ள வாருகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே வாருகாலை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகழ், அருப்புக்கோட்டை.