தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-12 18:45 GMT

போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் தேவர்சிலை நான்குமுனை சந்திப்பு பரபரப்பாக வாகனங்கள் இயங்கும் பகுதியாகும். இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதனை சீர்செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தராஜ், காரைக்குடி.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

சிவகங்கை பஸ்நிலையம் அருகில் வாகனஓட்டிகள் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

கணேசன், சிவகங்கை.

குவிந்து கிடக்கும் குப்பை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார்நகர் 5-வது வீதி சிதம்பரம் விசாலாட்சி பள்ளிக்கு பின்புறம் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

ராஜன், காரைக்குடி

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், மானாமதுரை. 

Tags:    

மேலும் செய்திகள்