மோசமான ரோடு
பெருந்துறை அருகே உள்ள பெருந்தலையூரில் இருந்து செரையாம்பாளையம் செல்லும் இணைப்புச்சாலை மற்றும் செரையாம்பாளையத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அந்த வழியாக சென்று வர சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செரையாம்பாளையம்
சீரமைக்க வேண்டும்
ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஈரோடு
பஸ் வசதி
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரிகளில் பெருந்துறை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் படித்து வருகிறார்கள். மேலும் பலா் ஈரோடு பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனா். எனவே பெருந்துறை ஆர்.எஸ்., வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம் வழியாக தினமும் காலை 9 அல்லது 9.15 மணி அளவில் பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவ-மாணவிகள், பெருந்துறை.
ஆபத்தான மின்கம்பம்
நம்பியூர் அருகே என்.வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், என்.வெள்ளாளபாளையம்.
குவிந்துள்ள குப்பைகள்
கோபி மொடச்சூரை அடுத்த வடுகபாளையம் பிரிவில் உள்ள மயானம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டமாக காணப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மொடச்சூர்
அகற்ற வேண்டும்
கோபி மொடச்சூரில் நாதிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள கலராமணி என்ற இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்று அடிக்கும்போது குப்பை தூசுகள் பறந்து அந்த வழியாக செல்பவர்களின் கண்ணில் படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கலராமணி.