பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

புகாா் பெட்டி பகுதி

Update: 2022-08-30 20:31 GMT


மிகவும் ஆபத்தான கட்டிடம்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மைக்கேல் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். ஆனால் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்துக்கு தேவையான மின்சார ஒயர் வெளியே தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடனே பழுதடைந்துள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மைக்கேல்பாளையம்.

குண்டும்-குழியுமான சாலை

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் சத்தி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்லமுடியவில்லை. மேலும் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே குண்டும்- குழியுமான சாலையை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

வேகத்தடை அமைக்கப்படுமா?

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து இல்லாமல் இருந்தது. இப்போது அந்த வேகத்தடையை அகற்றி விட்டனர். ஆனால் இப்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இதன் அருகில் மகளிர் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

மரக்கிளையில் உராயும் மின் கம்பி

கோபி அருகே உள்ள கொண்டயம்பாளையத்தில் மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் உள்ள வேப்பமரத்தின்​கிளையில் அந்த வழியாக செல்லும் மின் கம்பி உராய்கிறது. இதனால் மின் விபத்து மற்றும் மின் தடை ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின் கம்பியில் உராயும் மரக்கிளையை வெட்டி அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொண்டையம்பாளையம்.

போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியில் ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் ஈரோடு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தட்டிகளால் அந்த பகுதியில் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளம்பர தட்டிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதியில் பஸ்கள் திரும்பும் இடத்தில் திடீர் பள்ளம் உருவாகி உள்ளது. ஏற்கனவே அங்கு பள்ளம் ஏற்பட்டபோது தற்காலிகமாக மண் நிரப்பப்பட்டு பள்ளம் மூடப்பட்டது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் மீண்டும் பள்ளம் உருவாகி உள்ளது. எனவே பள்ளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ், ஈரோடு.

வீணாகும் குடிநீர்

அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பிரம்மதேசம் புதூர் பாலம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சரவணன், பிரம்மதேசம் புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்