'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-30 19:43 GMT

நாய்கள் தொல்லை

மதுரை ஜீவா நகர், புலிபாண்டியன் தெருவில் நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசு, ஜீவாநகர், மதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் திருமங்கலம் செல்ல போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்முருகன், மதுரை.

தாழ்வாக செல்லும் மின்வயர்

மதுரை மாவட்டம் பேரையூருக்குட்பட்ட எம்.சுப்புலாபுரம் கிராமம் இந்திரா காலனி குடியிருப்பு பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் பயணிக்க ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே மின்வயர்களை உயர்த்தி அமைத்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பழனிவேல், எம்.சுப்புலாபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 120 அடி ரோடு வழியாக சர்வேயர் காலனி, அய்யர்பங்களா ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி இருசக்கர வாகனஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரராஜ், அய்யர்பங்களா.

புதிய ரேஷன் கடை கட்டப்படுமா?

மதுரை மாவட்டம் கிரியகவுண்டன்பட்டி பகுதியில் இருந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து பல நாட்கள் ஆகிறது. பின்னர் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படவில்லை. மேலும் பழைய இடிக்கப்பட்ட கட்டிடத்தின் கழிவுகளும் அகற்றப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தினேஷ், கிரியகவுண்டன்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்