'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-22 18:45 GMT

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. சிறுவர்களும், வயதானவர்களும் சாலையில் நடந்து செல்ல அச்சம் கொள்கின்றனர். மேலும் மக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசிம், கீழக்கரை.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதி சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகுமாா், ராமநாதபுரம்.

ரவுண்டானா அமைப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ராமேசுவரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் பிரியும் இடத்தில் அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் நடக்கிறது. இதனால் இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தொண்டி.

மின்விளக்கு சரிசெய்யப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் சில இடங்களில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், திருப்பாலைக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்