'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-25 20:42 GMT

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் தெப்பக்குளத்திலிருந்து அனுப்பானடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

மின்விளக்கு எரியுமா?

மதுரை மாநகராட்சி 8-வது வார்டு முழுவதும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மின்விளக்கு பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

பயணிகள் நிழற்குடை தேவை

மதுரை மாவட்டம் உறங்காம்பட்டி ஊராட்சி புளிமளைப்பட்டி கிராமத்திற்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும் மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டிச்சாமி, புளிமளைப்பட்டி.

பஸ் வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் கல்லணை பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டி, கல்லணை.

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் கண்டியத்தேவன்பட்டி முதல் பெரியார் பஸ் நிலையம் வரை காலை மாலை என இரு வேளைகளில் அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் தினமும் வேலைக்கு செல்வோசிரமம் அடைகின்றனர். எனவே அந்த பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தன், புளியம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்