'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-17 18:09 GMT

குண்டும் குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்குமார், கமுதி.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் 5-வது தெருவில் சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகமத் சுல்தான், சக்கரக்கோட்டை.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டினம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், முத்துபட்டினம்.

கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாற்று கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கண்மாய் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீர்வளம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்றி நீர் வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக், கமுதி.

குளத்தை தூர்வாருவார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவிலில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் குளம் தூர்வாரப்படாத நிலையில் படித்துறைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோவில் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், நயினார்கோவில்.

Tags:    

மேலும் செய்திகள்