'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-21 17:33 GMT

வாய்க்கால் சீரமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சந்தை பின்புறம் உள்ள மழைநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் மழைநீர் செல்வதில்லை. சாலையில் தேங்குவதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாரூக் அலி, ஆர்.எஸ்.மங்கலம்.

மின்விளக்கு வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வடக்கு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் ஒரு மின்விளக்கு கூட இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிக்கு இரவு நேரங்களில் வர பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான மின்விளக்குகளை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,ராமநாதபுரம்.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மேற்கு தெருவில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மின் சாதனங்கள் எளிதில் பழுதடையும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சரியான அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சலீம், புதுமடம்.

பஸ் வசதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, பரமக்குடி.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோவில் செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் தார் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,ராமநாதபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்