'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-16 18:43 GMT

முடிவடையாத சாலை பணி

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மாவடி மதீனா நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கி 3 மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் உள்ளது. எனவே இங்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகமது சலீம், புதுமடம்.

எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வாலாங்குடி ஊராட்சி புலிக்குளம் கிராமத்தில் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

குவிந்து கிடக்கும் குப்பை

ராமநாதபுரம் நகர் அரண்மனை தலைமை தபால் நிலையம் பின்புறம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் அகற்றப்படாமல் குவிந்து உள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், ராமநாதபுரம்.

அடிக்கடி ஏற்படும் விபத்துகள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலை பழங்கோட்டையில் நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே விபத்துகளை குறைக்க இங்கு ரவுண்டானா அமைத்து, சிக்னல் விளக்குகள் ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஹமதுகான், திருப்பாலைக்குடி.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடற்கரை கிராமமாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 300 மீட்டருக்கு அப்பால் கடல் இருந்தது. தற்போது கடல் கடுமையாக வளர்ச்சி அடைந்து வருவதால் பெரியபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. கடற்கரை அருகில் உள்ள கிராமங்களுக்கு விரைவில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த கடல் அரிப்பை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்.

Tags:    

மேலும் செய்திகள்