தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-14 17:48 GMT

கீழே விழும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் மாவட்டம் சங்குபேட்டை 19-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளை கடிக்க துரத்துவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மயான கொட்டகை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் டி.களத்தூர் கிராமத்தில் மயான கொட்டகை மற்றும் மகளிர் சுகாதார வளாகம் அமைத்திட அரசு அனுமதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழையவிராலிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மரங்களில் அடிக்கப்படும் பதாகைகள்

சாலை விரிவாக்கத்தினால் பன்னெடுங்காலமாக பல்வேறு பயன்களை வழங்கிய புளி உள்ளிட்ட மண்ணின் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள சாலையோர மரங்களையும் ஆணி அடித்து, கம்பி கொண்டு கட்டி விளம்பரப் பதாகைகளை மாட்டும் செயல்கள் ஆங்காங்கே தற்போது தொடங்கியுள்ளது. மரங்களுக்கு உயிர் மட்டுமல்லாமல் உணர்வுகளும் உண்டு என்று ஆய்வு முடிவுகள் சொல்லும் வேளையில் மரங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய, பட்டைகளை பட்டுப்போகும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை மரங்களில் மாட்டுவதை விரைந்து தடுப்பதோடு ஏற்கனவே ஊரக மற்றும் நகர்ப்பகுதி சாலையோர, பொது இடங்களில் உள்ள மரங்களில் உள்ள பதாகைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்